fbpx
Homeபிற செய்திகள்ஊட்டியில் படகு போட்டி: மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்

ஊட்டியில் படகு போட்டி: மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்

நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு கோடை சீசனுக்காக வரும் லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க உலகப் புகழ் பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி, நூற்றாண்டு ரோஜா பூங் காவில் 19வது ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64வது பழக் கண்காட்சி ஆகிய கோடை விழாக்கள் நடைபெற்றது.

இந்நிலையில் கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக சுற்றுலாத்துறை சார் பில் உதகை படகு இல்லத்தில் படகு போட்டிகள் நடைபெற்றது.

இந்த படகு போட்டிகளை மாவட்ட கலெக்டர் அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஆண்கள் இரட்டையர் போட்டி, பெண்கள் இரட்டையர் போட்டி, தம்பதியினர் போட்டி, பத்திரிக்கையாளர் களுக்கான போட்டி, படகு இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்க் கான போட்டி என தனித் தனியாக நடைபெற்றது. ஊட்டி படகு இல்ல ஊழியர்களுக்கான துடுப்பு படகு போட்டி அங்கிருந்த அனைவரையும் வெகுவாக கவர் ந்தது. வெற்றி பெற்றவர்க ளுக்கு மாவட்ட கலெக்டர் வெற்றி கோப்பைகளை வழங்கி கௌரவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img