fbpx
Homeபிற செய்திகள்மூளைச்சாவடைந்த ஓய்வு பெற்ற வங்கி பணியாளரால் 5 பேருக்கு மறுவாழ்வு

மூளைச்சாவடைந்த ஓய்வு பெற்ற வங்கி பணியாளரால் 5 பேருக்கு மறுவாழ்வு

கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி அம்மன் கோவில் பகுதியில் பொன்னுசாமி (66) மனைவி சரஸ்வதி மற்றும் மகள் கார்த்திகா ஆகியோருடன் வசித்து வந்தார்.

இவர் கடந்த 28.12.2024 தேதி அன்று இரத்த அழுத்தம் அதிகமாகி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது மனைவி சரஸ்வதி மற்றும் மகள் கார்த்திகா ஆகியோர் பொன்னுசாமி உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார்கள்.

தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டது.

கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், கண்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், வழங்கப்பட்டது. கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்.

இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்து வமனை தலைவர் நல்லா ஜி பழனிசாமி பொன்னுசாமி குடும்பத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img