நாட்டின் முன்னணி பிரேக்கிங் சிஸ்டம் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் மற்றும் சந்தைக்குப் பிறகான சேவை பிரிவில் புகழ் பெற்ற பிரேக்ஸ் இந்தியா, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 90 நகரங்கள் மற்றும் 13 மாநிலங்களில் 17,000 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் பயணிக்கும் தனது முதல் பான் இந்திய வாடிக்கையாளர் ஈடுபாடு திட்டத்தை கன்னியாகுமரியில் துவக்கியது. விழாவில் ஃபிரிக்ஷன் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் பிசினஸின் மூத்த துணைத் தலைவர் சுஜித் நாயக் பேசியதாவது:
எங்கள் மொபைல் பயிற்சி மையத்தின் விரிவாக்கமான பிரேக்ஸ் இந்தியா யாத்ரா, நாங்கள் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய பான் இந்தியா நேரடி சந்தைப்படுத்தல் முயற்சியாகும்.
நாங்கள் 5 ஆண்டுகளுக்குமுன்பு இந்த பயணத்தை எங்கள் மொபைல் பயிற்சி மையங்கள் மூலம் தொடங்கினோம்.
எங்கள் ஸ்லோகன் ‘Partners for Safe Mobility’ -வாடிக்கையாளரின் பாதுகாப்பு எங்கள் முதன்மையானது. நாங்கள் அவர்களுக்கு தரமான மற்றும் உண்மையான தயாரிப்புகளை வழங்குவதை உறுதி செய்ய முயற்சிப்போம் என்றார்.
பிரேக்ஸ் இந்தியா வேன் இந்த வாரம் சென்னையில் உள்ள பிரேக்ஸ் இந்தியாவின் தலைமையகத்தில் வெளியிடப்பட்டது. மதுரை, பெங்களூரு, ஹைதராபாத், நாக்பூர், ஜான்சி, இந்தூர், ஜெய்பூர், குருகிராம், சண்டிகர் மற்றும் பல நகரங்கள் வழியாக காஷ்மீர் சென்று முடியும் பயணத்திற்காக கன்னியாகுமரியில் இருந்து கொடியசைத்து தொடங்கப்பட்டது. கிக் பிரேக் சர்வீஸ் (QBS) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்கள் (ASCs) போன்ற பிரேக்ஸ் இந்தியாவின் முந்தைய துவக்க முயற்சிகளும் இந்த ரோட்ஷோவின் போதுகாட்டப்படும்.