குழந்தைகளின் புற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஆதரவு அளிக்கும் ஒரு பிரத்யேக நோலாபி அமைப்பான ஆரோஹ் – கிவிங் ஹோப், புரூக்பீல்ட்ஸ் வழங்கிய சி.எஸ்.ஆர் நிதிகளை வெற்றிகரமாக செயல்படுத் தியுள்ளது.
இந்த முக்கியமான ஆதரவு, தமிழ்நாட்டில் பல்வேறு மருத்துவமனைகளில் சிறார்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
2013ல் தொடங்கிய அதன் பயணத்தில், ஆரோஹ் 10,000க்கும் அதிகமான புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைக ளுக்கு முழுமையான பரா மரிப்பை வழங்கி வருகிறது.
தற்போது, நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட மருத்துவமனை கள் மூலமாக 3,500 குழந்தைகளுக்கு ஆதர வளிக்கிறது. மருத்துவ உதவி இந்த அமைப்பின் மையப் பணியாகும். மேலும் உயிர் காப்பதற்கான சிகிச்சை களை உறுதி செய்ய பெரும் நிதியுதவி தேவை.
புரூக்பீல்ட்ஸ் வழங் கிய நிதி, முக்கிய மருத் துவ செலவுகளை ஈடுகட் டுவதில் மிக முக்கிய பங்காற்றியது. இது, ரத்தப் பரிசோதனை, ரசாயன சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை செலவுகளை ஈடுகட்ட உதவியுள்ளது. இதன் மூலம், பல சிறுவர்கள் புதிய நம்பிக்கையுடன் புற்றுநோயை எதிர்கொள் ளக்கூடிய சூழலை உரு வாக்கியுள்ளது.
வேலூரை சேர்ந்த 9 வயது குழந்தை, ஆக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுகீமியா எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆரோஹ் வழங்கிய உதவியால், முக்கிய பரி சோதனைகள் மற்றும் சிகிச்சையை பெற்று, அவரின் நிலை மேம்பட் டுள்ளது.
அதேபோல், மதுரை யைச்சேர்ந்த 4 வயது குழந்தைக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு அவளது மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கப்பட்டது.
ஈரோட்டில் உள்ள மற்றொரு குழந்தை, புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று, கணிசமான முன்னேற்றத்தைக் கண் டுள்ளார்.
இது குறித்து ஆரோஹ் – கிவிங் ஹோப் அமைப்பின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் பிந்து என் நாயர் கூறுகையில், “புரூக்பீல்ட்ஸ் சமூக நலத்திற்காக வழங்கும் உறுதிப்பாட்டிற்கு மிகவும் நன்றி செலுத்துகிறோம். அவர்களின் உதவி, உயிர்காக்கும் சிகிச்சையை வழங்குவதோடு மட்டுமல் லாமல், மிகவும் கடின மான சூழ்நிலையில் இருக் கும் குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் அளித் துள்ளது”, என்றார்.