90 வருட பாரம்பரிய மிக்க கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு 30% சிறப்புத் தள்ளுபடி மற்றும் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்புத் தள்ளுபடி விற்பனை 31.3.2025 வரை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் நடைபெறுகிறது.
சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக கண்கவர் வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் பட்டு சேலைகள், மென்பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், இயற்கை சாயமிட்ட பருத்தி காட்டன் சேலைகள் காஞ்சி காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், சுங்குடி சேலைகள், படுக்கை விரிப்புகள், சுடிதார் ரகங்கள், குர்தீஸ், நைட்டிகள், ஆடவர்களுக்கான ரெடிமேட் சட்டைகள் ஏராளமாக வரவ ழைக்கப்பட்டுள்ளன.
ரமலான் மற்றும் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை கோவை கோ-ஆப்டெக்ஸ் மருதம் விற்பனை நிலையத்தில் – சிரசெண்ட மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி முதல்வர் ஜெயந்தி, துணை முதல்வர் சமீனாபானு மற்றும் ஒருங்கிணைப்பாளர் நூர்ஜஹான் ஆகியோர் நேற்று மாலை 5.30 மணியளவில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.
இவ்விழாவில் முதுநிலை மண்டல மேலாளர் அம்சவேணி, முதுநிலை மேலாளர் (உற்பத்தி மற்றும் பகிர்மானம்) ஜெகநாதன், துணை மண்டல மேலாளர் லட்சுமி பிரபா, கோ- ஆப்டெக்ஸ் மருதம் விற்பனை நிலைய விற்பனை மேலாளர் என்.செல்வன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கோ-ஆப்டெக்ஸின் மாதாந்திர சேமிப்பு திட்டம் ரூ.300லிருந்து ஆரம்பமாகிறது. வாடிக்கையாளர் கள் 11 மாத சந்தா தொகையை செலுத்தினால் 12வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்தும். வாடிக் கையாளர் கூடுதல் முதிர்வுத் தொகைக்கு துணிகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், அனைத்து வகையான புடவைகள், ரெடிமேடு சட்டைகள் மற்றும் பெட்ஷீட் ரகங்களுக்கு இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்புத்திட்டத்தின் கீழ் கோ-ஆப்டெக்ஸின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 31.3.2025 வரை விற்பனை நடைபெறும்.
இவ்வாறு கோ ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் ப.அம்சவேணி தெரிவித்தார்.