fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் கேம்பிரிட்ஜ் ஆங்கிலத் தேர்வு மையம் - அறிமுகம்

கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் கேம்பிரிட்ஜ் ஆங்கிலத் தேர்வு மையம் – அறிமுகம்

கோவை ஸ்டேன்ஸ் பள்ளிகள், கல்வித்துறையில் 163 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து தற்போது, ஆங்கில மொழியைக் கற்பவர்களுக்கு உலகின் முன்னணித் தரம் வாய்ந்த தகுதி மற்றும் தேர்வுகளை வழங்கி வரும் லண்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆங்கில மொழி மதிப்பீடுத் துறையின் ஒப்புதலுடனும் பெருமையுடனும் கேம் பிரிட்ஜ் ஆங்கிலத் தேர்வு மையத்தை ‘ஸ்டேன்ஸ் பள்ளி ஆங்கில மையம்’(IA602) அறிமுகம் செய்கிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் ஒவ்வொரு ஆண்டும் 130 நாடுகளில் 5.5மில்லியன் மக்களுக்கு தகுதி மற்றும் தேர்வுகளை வழங்கி வருகின்றது. இச்சான்றிதழ்கள் உலக அளவில் 20,000க்கும் மேற்பட்ட முன்னணிப் பல்கலைக்கழகங்கள் , பணியாளர்கள் மற்றும் அரசுகளால் அங்கீகரிக்கப்பட் டவை. மேலும் இவை சர்வதேசத் தரத்தின் வரைபடமாகவும் விளங்குகின்றது.

இம்மதிப்புமிக்க அங்கீகாரம் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர்களை கேம்பிரிட்ஜ் ஆங்கிலத் தகுதியில் Pre – A1நிலை முதல் C1 நிலை வரை சி.இ.எஃப்.ஆர். உடன் தொடர்புடைய வெவ்வேறு நிலைகளில் தகுதிப்படுத்த உதவுகிறது.

மாணாக்கரின் கல்விப்புலம் மற்றும் எதிர்காலத் தொழில் வாய்ப்புகளைப் பெருக்கவும் அதிகரிக்கக்கூடிய சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கிலச் சான்றிதழ்களைப் பெறவும், வாழ்வியல் அனுபவங்களை அடையவும், அர்ப்பணிப்பு கொண்ட ஊழியர்களின் குழுவுடன் இணைந்து கற்கவும், தங்கள் திறன்களை வெளிக்கொணர்வதற்கும் மாணாக்கர்களுக்கு இது ஓர் அருமையான வாய்ப்பு ஆகும்.

ஸ்டேன்ஸ் பள்ளிகளின் தாளாளர் பிலிப் ஆர்.ஜே. பவுலர், இன்று (20ம் தேதி) ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. மற்றும் ஸ்டேன்ஸ் ஐ.சி.எஸ்.இ. / ஐ.எஸ்.இ. ஆகிய பள்ளிகளைச் சார்ந்த பெற்றோர் மற்றும் மாணவர்கள் முன் உரையாற்றும்போது, மாணாக்கரிடையே ஆங்கில மொழிப் புலமையை வளர்த்தெடுப்பதும் அவர்கள் இலக்கை அடையத் துணைபுரிவதுமே இப்பணிகளின் நோக்கமென்று அடிக் கோடிட்டுப் பேசினார்.

மேலும் அவர் பேசுகையில் இளம்பிராயக் கல்வியை (EYP) ஸ்டேன்ஸ் மழலையர் பள்ளி பின்பற்றிவருவதாகவும் இனிவரும் காலங்களில் ஆரம்பக் கல்வித் திட்டமாக (PYP) வகுப்பு 1-4 வரை ஸ்டேன்ஸ் பன்னாட்டுப் பள்ளியில் 2025 -26 ஆம் கல்வியாண்டில் தொடரப்படும் என்றார்.

டி.கே.அருணாச்சலம், வட்டார இயக்குநர் – தெற்காசியா(ஆங்கிலம்) கேம் பிரிட்ஜ் பல்கலைக் கழக பத்திரிக்கை மற்றும் மதிப்பீடு, கெவின் கொய்னே, முதன்மைக் கணக்கு மேலாளர், தெற் காசியா (ஆங்கிலம்) கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பத்திரிக்கை மற்றும் மதிப்பீடு ஆகிய இருவரும் இணைந்து ஸ்டேன்ஸ் பள்ளிகளின் நிர்வாகத் தலைவர் மெர்சி ஓமனுக்கு நினைவுப் பரிசினை வழங்கினர்.

ஸ்டேன்ஸ் பள்ளிகளின் செயலர் கிளன் குரோனிங், நிர்வாகக்குழு உறுப்பினர் முனைவர் சுஜித்தா ராமச்சந்திரன், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி முதல்வர் செலின் வினோதினி, ஸ்டேன்ஸ் ஐ.சி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஜெனட் ஜெயப்பிரகாஷ், ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஐலின் ஜித்ரோ மற்றும் நிர்வாக அலுவலர் வி.எம்.ஜான் ஆகி யோர் விழாவில் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img