fbpx
Homeபிற செய்திகள்கேம்போர்டு கோல்டன் பூட் சாம்பியன்ஷிப் 2024: மாணவியர் கால்பந்து போட்டியில் முதலிடம்- கேம்போர்டு இன்டர்நேசனல் பள்ளி...

கேம்போர்டு கோல்டன் பூட் சாம்பியன்ஷிப் 2024: மாணவியர் கால்பந்து போட்டியில் முதலிடம்- கேம்போர்டு இன்டர்நேசனல் பள்ளி அசத்தல்

பள்ளிகளுக்கு இடையேயான கேம்போர்ட் கோல்டன் பூட் சாம்பியன்ஷிப் 2024 போட் டிகள் அக்டோபர் 15, 16 தேதிகளில் நடந்தது. பல்வேறு பள்ளிகளிலிருந்து 20 அணிகள் பங்கேற்றன. 18 வயதுக்குட்பட்ட சிறுமியர், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டிகள் நடந்தன.

போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கான போட்டியில் கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி முதல் இடத்தை பெற்றது. இரண்டாவது இடத்தை யுவா பப்ளிக் பள்ளி பெற்றது.

14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான பிரிவில், அத்யாயனா இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி முதல் இடத்தை பெற்றது. இரண்டாம் இடத்தை கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி பெற்றது.

சிறுமியர் பிரிவில், சிறந்த கோல் கீப்பராக ராஜ்ஸ்ரீ தேர்வு பெற்றார். சிறந்த தடுத்தாடுபவராக கயலின் தேர்வானார். சிறு வர்களுக்கான பிரிவில் கேம்போர்டு இன்டர் நேஷனல் பள்ளியின் அனிருதா தேர்வானார்.

பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர். அவர்களது முயற்சியையும் கடின உழைப்பையும் பாராட்டினர்.

ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img