fbpx
Homeபிற செய்திகள்கடலூரில் 14,90,732 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

கடலூரில் 14,90,732 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

கடலூர் மாவட்டத்தில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் மற்றும் கால் நடைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கடலூர் வட்டம், நாணமேடு பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 3 லட்சம் பசு மற்றும் எருமை இனங்களுக்கு 100% கோமாரி தடுப்பூசி போடு வதற்காக 83 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 3,53,663 மாடுகளும், 6,031 எருமை மாடுகளும், 42,675 செம் மறியாடுகளும், 3,41,587 வெள்ளாடுகளும், 9,50,457 கோழிகளும், 8,280 பன் றிகளும் விவசாய பெரு மக்களால் வளர்க்கப்பட்டு வருகின்றன.
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சம் கால்நடைகள் உள்ளன. ஏராளமானோர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் 2023&24-ஆம் ஆண்டில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 20 முகாம்கள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 280 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், கால்நடை பராமரிப்புத்துறை மூலம் நடத்த திட்டமிடப்பட்டு, ஒவ்வொரு பகுதியாக முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 123 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 9,710 விவ சாயிகளின் 1,33,743 கால் நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், நோய்க ளுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை பரி சோதனை, அறுவை சிகிச் சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய்த்தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும்
பல்வேறு சுகாதார நடவடிக்கைகள், கால் நடைகள் மற்றும் கோழி களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி, நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசிகள், நோய்களை கண்டறிய ஆய்வுகள், மடிநோய் கண்டறியும் சோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் சினை ஆய்வு மேற்கொள்ளுதல், கேசிசி கடன் அட்டை விண்ணப் பம் வழங்குதல், தாது உப்பு கலவை வழங்குதல், கால் நடை பல்கலைக்கழகம் மூலம் தொழில்நுட்ப பயி ற்சி மற்றும் செய்முறை விளக்கம், ஆவின் மூலம் பால் உற்பத்தி பெருக்கம் மற்றும் பால் கொள்முதல் தொடர்பான விளக்கம் அளிக்கப்படுகிறது.

சிதம்பரம், கடலூர், விருத்தாசலம் அரசு கால் நடை மருத்துவமனை ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் முதற்கட்டமாக 1,212 முகாம்களில் 1,01,212 விவசாயிகளின் 2,95,860 கால்நடைகளுக்கும், இரண்டாம் கட்டமாக 1,231 முகாம்களில் 99,567 விவசாயிகளின் 2,99,930 கால்நடைகளுக்கும், மூன்றாம் கட்டமாக 1,189 முகாம்களில் 1,01,211 விவசாயிகளின் 2,98,660 கால்நடைகளுக்கும், நான்காம் கட்டமாக 99,690 விவசாயிகளின் 1,225 முகாம்களில் 3,00,417 கால்நடைகளுக்கும், ஐந்தாம் கட்டமாக 1,189 முகாம்களில் 88,958 விவசாயிகளின் 2,98,565 கால்நடைகளுக்கும் என மொத்தம் இதுவரை ஐந்து கட்டங்களில் 6,046 சிறப்பு முகாம்களில் 4,90,638 விவசாயிகளின் 14,90,732 கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த ஆய்வின்போது, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பொன்னம்பலம், துணை இயக்குநர் தங்கவேல், உதவி இயக்குநர் வேங்கடலட்சுமி, மருத்துவர்கள் சேதுபதி, வித்யாசங்கர், நிக்சன், நடராஜ், ஸ்டாலின் உட்பட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img