fbpx
Homeபிற செய்திகள்கோவை சவுரிபாளையத்தில் புனித சவேரியார் ஆலய தேர் பவனி

கோவை சவுரிபாளையத்தில் புனித சவேரியார் ஆலய தேர் பவனி

கோவை சவுரிபாளையத்தில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தேர் பவனி நேற்று மாலை நடைபெற்றது.

இதையொட்டி தேர் வண்ண விளக் குகளால் அலங்கரிக்கப்பட்டது.

தேர் பவனியை கோவை மறை மாவட்ட நல்லாயன் குருமட பேராசிரியர் ஜோசப்ராஜ் தொடங்கி வைத்தார்.
இதில், புனித சவேரியார் ஆலய பங்குத்தந்தை மரிய ஜோசப், உதவி பங்கு தந்தை நவீன் ஆண்டனி மற்றும் பங்கு மக்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். தேர் பவனியையொட்டி ஆலயத்தின் முன்பு வண்ண விளக்குகளால் ஆன பூக்கோலம் போடப்பட்டிருந்தது.

படிக்க வேண்டும்

spot_img