fbpx
Homeபிற செய்திகள்இந்திய பட்டய வரி பயிற்சியாளர்கள் நிறுவனம் எழுச்சியாக செயல்படும் என நிறுவனர் உறுதி

இந்திய பட்டய வரி பயிற்சியாளர்கள் நிறுவனம் எழுச்சியாக செயல்படும் என நிறுவனர் உறுதி

இந்திய பட்டய வரிப் பயிற்சியாளர்கள் நிறுவனம் கர்நாட காவை தலைமையிடமாக கொண்டு மத்திய அரசின் தேசிய தொழில் கல்வி மற்றும் பயிற்சி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம், இந்திய வரிப் பயிற்சியாளர்களை ஒருங்கிணத்து செயல்படுகிறது

இந்நிறுவனத்தின் மீது அண்மையில், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தனர்.

தொடர்ந்து, பட்டய வரிப் பயிற்சியாளர்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் மீது உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில் அண்மையில் கர்நாடகா உயர் நீதிமன்றம் இந்திய பட்டய வரிப் பயிற்சியாளர்கள் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்திய பட்டய வரிப் பயிற்சியாளர்கள் நிறுவனத்தின் கோவை கிளையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், இந்திய பட்டய வரிப் பயிற்சியாளர்கள் நிறுவனத்தின் நிறு வனர் ஸ்ரீதர் பாரத்தசாரதி மற்றும் கோவை கிளையின் தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் பேசினர்.

பட்டய பயிற்சியாளர்களுக்கு வரி தொடர்பான அனைத்து பயிற்சிகளையும் வழங்கி வந்த இந்த நிறுவனத்தின் பணிகள் மீண்டும் எழுச்சியாக நடைபெறும் என தெரிவித்தனர்.

கூட்டத்தில் கோவை, சென்னை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், மைசூர், பெங்களூர், ஹூப்ளி மற்றும் பெல்லாரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரிப் பயிற்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img