fbpx
Homeபிற செய்திகள்‘செயற்கை நுண்ணறிவு, மனிதர்களின் எதிர்காலம்’ ஜே. கிருஷ்ணமூர்த்தியின் டிஜிட்டல் கையேடு வெளியீடு

‘செயற்கை நுண்ணறிவு, மனிதர்களின் எதிர்காலம்’ ஜே. கிருஷ்ணமூர்த்தியின் டிஜிட்டல் கையேடு வெளியீடு

‘செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மனிதநேயத்தின் எதிர்காலம்’ என்ற டிஜிட்டல் கையேட்டை கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவு இன்னும் 60 ஆண்டு காலத்திற்குள் மனித குலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பார்வையைப் பற்றி விவாதிக்கிறது.

மனிதர்கள் செய்த அல்லது செய்ய இருக்கும் அனைத்தையும் கணினியால் விஞ்சும் போது, மனிதனின் எதிர் காலம் என்ன? மனிதன் சரியான நேரத்தில் விழித்தெழுவதற்கான அழைப்புவிடுக்கிறது இந்த டிஜிட்டல் தொகுப்பு.
கணினிகளின் வளர்ச்சி யால் சமூகம் தலைகீழாக மாறும் என்று 1981-ம் ஆண்டில் கிருஷ்ணமூர்த்தி எச்சரித்திருந்தார்.

சமீபத்திய கணினிக ளைப் போல நாம் எப்போதும் தெரிந்தவற்றில் இருந்து தெரிந்தவற்றுக்கு நகர்கிறோம். தெரிந்தவற்றில் இருந்து செயல் படுகிறோம் என்று மனித மனதின் செயற்கை நுண்ணறிவுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார்.

மனித மனதில் செயற்கை நுண்ணறிவின் விளைவுகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி பற் றிய புதிய விளக்கத்தை இந்த 34 பக்க கையேடு தருகிறது.
செயற்கை நுண்ணறிவின் சவாலில் இருந்து ஒரு மாற்றம் மற்றும் வழியை முன்வைக்கிறார்.

மனித குலத்தின் எதிர்காலம் பொழுதுபோக்கைத் தேடுவது, விளையாட்டுகளில் அதிகமாக உள்நுழைவது, மூளை எல்லையற்றதால் உள்நோக்கிச் செல்வது என்கிறார்.

செயற்கை நுண்ணறிவு ஆதிக்க செலுத்த இருக்கும் எதிர்காலத்தில், பெற்றோர்கள், கல்வியாளர்கள், எந்தவொரு துறையிலும் உள்ள நிபுணர்களுக்கும், வரவிருக்கும் நெருக்கடியைப் பற்றி சிந்திக்கும் மற்றும் வழியைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு தீவிரமான மனிதர்களுக்கு ஆழமான நுண்ணறிவுகளை வழங்குகிறது இந்த டிஜிட்டல் கையேடு.

படிக்க வேண்டும்

spot_img