பாரம்பரிய இந்திய கைவினைஞர்கள் மற்றும் கைவினைப்பொருட்களை மேம்படுத்துவதில் தஸ்த்கர் முக்கிய கவனம் செலுத்துகிறது.
இந்நிலையில் கிராமப்புற கைவினைஞர்களுக்கும் தற்கால நகர்ப்புற நுகர் வோருக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் சென்னை
கொட்டிவாக்கம் ஒய் எம்சிஏ பாய்ஸ் டவுனில் ஜனவரி 4 முதல் 12 வரை தஸ்த்கர் பஜார் நிகழ்வை நடத்தி வருகிறது.
இதில் கிட்டத்தட்ட 18 இந்திய மாநிலங்களில் இருந்து 110க்கும் மேற்பட்ட திறமையான கைவினைஞர்களுடன், நாடு முழுவதிலுமிருந்து நேர்த்தியான படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
இதில், கையால் நெய்யப்பட்ட கைத்தறி, காந்த எம்பிராய்டரி, தோல் பொம்மலாட்டங்கள், மீனகரி நகைகள், டஸ் ஸார் பட்டு நெசவு, கை ஷிபோரி
இயற்கை சாயம், புஞ்சா துரிஸ், டெரகோட்டா, மூங்கில் பெல்ஸ் தயாரிப்புகள், பழங்குடியினர் கலைகள், பழங்குடியினரின் கலைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் பஜாரில் கலை நிகழ்சிகளும் இடம் பெற்றுள்ளது.