fbpx
Homeபிற செய்திகள்டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சிக்கலான அறுவை சிகிச்சையில் சாதனை

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சிக்கலான அறுவை சிகிச்சையில் சாதனை

முதிய நோயாளிக்கு சிக்கலான அறுவை சிகிச்சையை டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்து வமனை வெற்றிகரமாக செய்திருக்கிறது. 2018-ம் ஆண்டில் ஃபுரொபசர் டாக்டர். அமர் அகர்வாலால் அறிமுகம் செய்யப்பட்ட ஊசித்துளை பியூபிலோபிளாஸ்டி (PPP), என்பது விழிப்பாவையை (பியூபில்) ஒரு ஊசித்துளை அளவிற்கு குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு உத்தியாகும்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் கூட்டத் தில் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். அமர் அகர்வால் கூறியதாவது:
67 வயதான மணி என்ற நபருக்கு முழுமையான கருவிழி சேதத்துடன் அவ ரது வலது கண்ணில் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், உறுப்புமாற்று சிகிச்சைக்கு பதிலாக கருவிழி மற்றும் பிரிந்து விட்ட விழிப்படலத்தின் முழு அடர்த்தியையும் சரி செய்யும் சிகிச்சையை மேற்கொள்ளவும், சரிந்திருக்கிற விழியின் உட்புறத்திசுக்களை மீண் டும் சரியாக நிலைநிறுத்தவும் நாங்கள் முடிவு செய்து சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அஸ்வின் அகர்வால் கூறுகையில்,
“உயரளவிலான சிதறல் பார்வை பிரச்சனை இருக்கிற நோயாளிகள், இந்த செயல்முறை வழியாக அவர்களின் பார்வைத் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பெற முடியும்“ என்றார்.

பிராந்திய தலைவர் டாக்டர் சௌந்தரி பேசு கையில், “கண்புரைக் கான அறுவைசிகிச்சை மற்றும் ஊசித்துளை பியூபிலோ பிளாஸ்டி என அனைத்து செயல் முறைகளையும் ஒரே அமர்வில் ஒருங்கிணைத்து நாங்கள் வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறோம்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img