fbpx
Homeபிற செய்திகள்ஜெம் மருத்துவமனை பெருங்குடல் நோய்களுக்கான சமூக ஊடக ஹெல்ப் லைன் துவக்கம்

ஜெம் மருத்துவமனை பெருங்குடல் நோய்களுக்கான சமூக ஊடக ஹெல்ப் லைன் துவக்கம்

சென்னை ஜெம் மருத்துவமனை குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை கடைபிடிக்கும் வகையில் “பெருங்குடல் நோய்களுக்கான சமூக ஊடக ஹெல்ப் லைனை” தொடங்கியுள்ளது.

இந்த முன்முயற்சி மூலம் பெருங்குடல் நோய்கள் தொடர்பான தங்கள் கேள்விகளை சென்னை ஜெம் மருத்துவமனையின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக பக்கங்களில் நோயாளிகள் பதிவிட முடியும்.

அந்தந்த துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் ஒவ்வொரு கேள்வியையும் ஆய்வு செய்து 24 மணி நேரத்திற்குள் விரிவான பதிலை அனுப்புவார்கள்.

இந்நிலையில் சென்னை ஜெம் மருத்துவமனை இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

இது குறித்து ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சி.பழனிவேலு கூறுகையில், “ஜெம் மருத்துவமனையில் கடந்த 30 ஆண்டுகளில் 5500க்கும் மேற்பட்ட லேப்ராஸ்கோபிக் பெருங்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் செய்துள் ளோம்“ என்றார்.

ஜெம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் எஸ். அசோகன் கூறுகையில், “எங்கள் மருத்துவ மனையில் நோயாளிகள் குறைந்த தழும்புகள், குறைந்த வலி மற்றும் செலவு குறைந்த முறைகள் மூலம் விரைவாக குணமடைவதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் உறுதிசெய்ய முடியும்“ என்றார்.

சென்னை ஜெம் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பி.செந்தில்நாதன் பேசுகையில், “சமூக ஊடக ஹெல்ப்லைனைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்“ என்றார்.

ஜெம் மருத்துவமனையின் பெருங்குடல் துறைத் தலைவர் டாக்டர். பினக் தாஸ்குப்தா கூறுகையில், “பெருங் குடல் புற்றுநோயை ஸ்கிரீனிங் சோதனைகள் மூலம் முன்கூட்டிய கட்டிகளை கண்டறியலாம்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img