சென்னையின் பிரபல உயர்சிகிச்சை மருத்துவமனை யான காவேரி மருத்துவ மனையின் இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை குழுவிற்கு, தமிழ்நாடு மாநில உறுப்புமாற்று சிகிச்சை ஆணையம் (டிரான்ஸ்டான்) கௌரவம் மிக்க விருதை வழங்கி பாராட்டியிருக்கிறது.
நோயாளிகளின் உடல்நிலை பாதிப்பை மதிப்பிடும் தொடக்க செயல்பாட்டிலிருந்து, உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பிறகு பின்தொடர் பராமரிப்பு வரை இக்குழுவினரின் செயல்பாடும், சேவையும் நிகரற்றதாக உலகத் தரத்தில் இங்கு வழங்கப்படுவது குறிப்பிடத் தக்கது.
காவேரி மருத்துவமனையில் நடைபெறும் இதய மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சைகள் நிலையாக வெற்றி கரமான விளைவுகளைப் பெற் றுத் தருவதற்கு ஒரு மிக முக்கிய காரணியாக உறுப்புதானம் அளிப்பவர்கள் மற்றும் தானம் பெறும் நோயாளிகள் ஆகிய இருவருக்கிடையிலான பொருந்து நிலையை சரியாக கண்டறிவதில் இக்குழுவினரின் நிபுணத்துவம் இருக்கிறது.
சென்னை காவேரி மருத்து வமனையின், மருத்துவ இயக் குநர் டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி, டிரான்ஸ்டான் வழங்கிய விருதுக்காக நன்றி தெரிவித்து பேசியதாவது:
டிரான்ஸ்டான் அமைப்பிட மிருந்து கிடைத்திருக்கும் இவ்வி ருதும், அங்கீகாரமும் எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய கௌரவமாகும். இதய மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சையில் மேன்மையான விளைவுகளை உறுதி செய்வதில் எமது குழுவினர் கொண்டிருக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப் பையும், நிபுணத்துவத்தையும் இவ்விருது சுட்டிக்காட்டுகிறது.
உறுப்புமாற்று செயல்முறை வழியாக, உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளின் உயிரை காப்பதில் எமது குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஆழமான அக்கறையும், உறுதியும் கொண்டிருக்கின்றனர்.
எங்களது செயல்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதாக விளங்கும் இவ்விருது, எமது சிகிச்சை தரநிலைகளை மேலும் மேம்படுத்துவதற்கு உத்வேக மளிக்கிறது என்றார்.