காவேரி மருத்துவமனை ஆழ்வார்பேட்டை சென்னையில் உள்ள மக்களிடையே நீரிழிவு குறித்து நடத்தப்பட்ட ஒரு விரிவான ஆய்வின் முக்கிய கண்டறிதல் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தில் நகரின் பல்வேறு இடங்களில் 3,971 நபர்களுக்கு நீரிழிவிற்கான தொடக்கநிலை ஸ்கிரீனிங் சோதனை செய்யப்பட்டது. இதில், வகை 2 நீரிழிவு நோய் குறித்த முந்தைய வரலாறு இல்லாத நபர்களில் 21% பேர் தங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் உள்ள அசாதாரண நிலையை (டிஸ்கிளைசீமியா) அறிய வில்லை. கர்ப்ப கால நீரிழிவு நோய் இருந்த பெண்களில் 55.1% பேருக்கு வகை 2 நீரிழிவு நோய் பிறகு உருவாகியிருக்கிறது.
வகை 2 நீரிழிவு நோய் வரலாறு உள்ள நபர்களிடையே 67.6% உடல் பருமன் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக இருந்தது என ஆய்வை இம்மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
காவேரி மருத்துவமனையின் மூத்த நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் பரணீ தரன் கூறியதாவது: இந்த ஆய்வின் கண் டறிதல் முடிவுகள் நீரி ழிவு நோயை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு தன்முனைப்புடன் கூடிய பரிசோதனைத் திட்டங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பொது சுகாதார முன்னெடுப்புகளின் அவ சரத் தேவையை வலியுறுத் துகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “உலகளவில் நீரிழிவு நோயின் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிறப்பான ஆய்வு முயற்சியை மேற்கொண்ட டாக்டர் பரணீதரன் மற்றும் குழுவினரை நான் மனமார பாராட்டுகிறேன்” என்றார்.