fbpx
Homeபிற செய்திகள்இலங்கையில் ஆசிய பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப்- சென்னை மாணவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்

இலங்கையில் ஆசிய பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப்- சென்னை மாணவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்

இலங்கையில் உள்ள களுத்துறையில் நடந்த 16-வது ஆசிய பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் 2022 போட்டியில், சென்னை முகப்பேர் வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 3-வது படிக்கும் மாணவர் மிதுன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

செஸ் போட்டிக்கு, ஆசிய செஸ் கூட்டமைப்பு, சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை செஸ் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
செஸ் போட்டி வஸ்கடுவ என்னும் இடத்தில் உள்ள சிட்ரஸ் ஓட்டலில் நடைபெற்றது.

சர்வதேச அளவில் வங்கதேசம், இந்தியா, ஈரான், இந்தோனேசியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவுகள், மலேசியா, மங்கோலியா, பாகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ் பெகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இதில் 9 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு நடைபெற்ற செஸ் போட்டியில், சென்னை முகப்பேர் வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி 3-ம் வகுப்பு மாணவர் மிதுன் பங்கேற்றார். இவர் போட்டியில் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

‘கேண்டி டேட் மாஸ்டர்’

அவர் மொத்தம் 9 புள்ளிகளில் 7.5 புள்ளிகளைப் பெற்றார். இதில் 2-வது இடம் கிடைத்ததால், அவருக்கு சர்வதேச செஸ் கூட்டமைப்பின் ‘கேண்டி டேட் மாஸ்டர்’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி இலங்கை பிரதமரின் கொழும்பு இல்லமான டெம்பிள் ட்ரீஸில் நடைபெற்றது. 9 வயதுக்குட்பட்ட பிரிவில், கிளாசிக்கல், ரேபிட், பிளிட்ஸ் பிரிவுகளில் மிதுன் அணி முதலிடத்தைப் பிடித்தது.

இவர் கடந்த 2019-ம் ஆண்டு ரேபிட் ரேட்டிங் வீரராக தனது 5 வயதில் தேர்வு செய்யப்பட்டார். ரேபிட் ரேட்டிங் என்பது 10 நிமிடங்கள் மற்றும் அதற்கு மேல் விளையாடுவதாகும். அத்துடன் அவர் கடந்த காலங்களில் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img