fbpx
Homeபிற செய்திகள்குழந்தைகள் தத்தெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகள் தத்தெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தூத்துக்குடி அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையம் சிறப்பு தத்துவள மையம் நடத்திய தொட்டில் குழந்தை அறை திறப்பு, சட்ட ரீதியிலான குழந்தை தத்தெடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் அரசு விதிமுறைகளின் படி தத்து பெற்றோருக்கான குழந்தைகள் தத்தெடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரத்தில் தேசிய தத்தெடுப்பு நவம்பர் மாதத்தை முன்னிட்டு சிறப்பு விருந்தினர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ் தொட்டில் குழந்தை அறை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து குழந்தை தத்தெடுப்பு நிகழ்ச்சிக்கு அருட்தந்தை பிரெமில்டன் லோபா தலைமை தாங்கினார்.

பின்பு தூய சூசை அறநிலை குழந்தைகள் மற்றும் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் குழந்தைகளை தத்தெடுக்கும் முறைகளை குறித்து விழிப்புணர்வு நாடகத்தை தத்துரூபமாக நடத்திக் காட்டினர் .
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பேசும்போது, குழந்தைகளை அரசு விதிமுறைகளின் படி எவ்வாறு தத்தெடுப்பது குறித்தும் , சிறார் நீதி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2015 , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினால் செயல்படுத்தப்படும் வளர்ப்பு பராமரிப்பு திட்டம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் சட்ட ரீதியிலான தத்தெடுத்தல் அவசியம் குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அருள்பணி மேரியா,செட்ரிக் பீரிஸ்,அந்தோணி பிரஜித், பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ், சமூகப் பணியாளர் வில்சன்,திரு இருதய சபை அருட் சகோதரிகள்,புனித அன்னாள் சபை அருட் சகோதரிகள், இல்ல குழந்தைகள் மற்றும் தத்து குடும்பத்தார்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img