வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சிதம்பரம் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், கனமழையை எதிர்கொள்ளும் வகையில், சிதம்பரம் நகராட்சியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நகர பகுதியில் உள்ள வாய்க்கால்கள் மற்றும் குளத்தை சிதம்பரம் நகர மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார்.