“ஆட்டிசம்“ எனும் குழந்தை வளர்ச்சி குறைபாடு கண்டறியும் முகாம் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் 2 நாட்கள் சிதம்பரத்தில் நடைபெற்றது.
சிதம்பர த்தில் குழந்தைகள் நல மருத்துவமனையில் நடைபெற்ற வளர்ச்சி குறைபாடு ஆட்டிசம் கண்டறியும் இந்த முகாமை டாக்டர் ஆர்.முத்துக்குமரன் துவக்கி வைத்தார். முன்னதாக அவர் குழந்தைகள் நல விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
முகாமில் இந்திய மருத்துவ சங்க சிதம்பரம் கிளை தலைவர் டாக்டர் மணிசுந்தரம், கடலூர் மாவட்ட குழந்தைகள் நல மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சிதம்பரநாதன் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து 2ஆம் நாள் விழிப்புணர்வு முகாம் பள்ளிப்படை ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. 2 நிகழ்வுகளிலும் சிதம்பரம் ரோட்டரி சங்க தலைவர் வி. அருண் தலைமை வகித்தார். குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் வி.சிவப்பிரகாசம் இந்த முகாமின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார்.
ரோட்டரி சங்க மண்டல துணை ஆளுநர் எஸ்.திருஞானசம்பந்தம் ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் டாக்டர் அருள்மொழிசெல்வன், ஆர்.கேதார்நாதன்,டாக்டர் பாலாஜி சுவாமிநாதன் வாழ்த்துரை வழங்கினர்.