சிதம்பரம் அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
பேரூராட்சி மன்ற தலைவர் க.பழனி தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவவர் கோ.பாலமுருகன்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம்,சுகாதார ஆய்வாளர் தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் சிவக்கம் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் நிவேதா முருகதாஸ் மற்றும் மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு அலுவலர்கள்,ஊழியர்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.