fbpx
Homeபிற செய்திகள்தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை

தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு, கோவை கலாம் அறக்கட்டளை, நேரு நகர் அரிமா சங்கம், ஆகியோர் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினர், கலாம் மக்கள் அறக்கட்டளை, நேரு நகர் அரிமா சங்கம் ஆகியோர் சார்பாக கோவை மாநகராட்சி 46 வது வார்டு இரத்தினபுரி பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

கலாம் மக்கள் அறக்கட்டளையின் நிறுவனர் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய துணை தலைவர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலை இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்,,பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வராஜ்,தி.மு.க.பகுதி செயலாளர் லோகு,நேரு நகர் அரிமா சங்கத்தின் தலைவர் மோகன்ராஜ்,செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,பாலசுப்ரமணியம்,கலாம் மக்கள் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img