fbpx
Homeபிற செய்திகள்உற்பத்தி பொருட்களை இருப்பு வைக்க தாலுகா வாரியாக தானிய கிடங்கு ஏற்படுத்த வேண்டும்: தென்னை சார்...

உற்பத்தி பொருட்களை இருப்பு வைக்க தாலுகா வாரியாக தானிய கிடங்கு ஏற்படுத்த வேண்டும்: தென்னை சார் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

ஈரோடு மற்றும் திருப் பூர் மாவட்ட தென்னை சார் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் குழுக் கூட்டம் ஈரோடு மாவட்டம் சென்னி மலையில் நடைபெற்றது.

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தென்னை சார் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தனசேகரன், செயலாளர் சதாசிவம், பொருளாளர் செந்தில்குமார், தமிழ்நாடு அரசு தேங்காய் நார் சிஇஓ டாக்டர்.கண்ணன், ஆடிட்டர் செல்வராஜ், SIDBI ஈரோடு கிளை மேலாளர் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் சோலார் அமைத்திட அரசு மானி யம் 50%, தீ விபத்து காப் பீடு மானியம் 50% மின் மானியம் வழங்கிட வேண்டும், ஜிஎஸ்டி வரை முறைப்படுத்த வேண்டும், உற்பத்தி பொருட்களை இருப்பு வைக்க தாலுகா வாரியாக தானிய கிடங்கு அரசு முழு மானியத்துடன் ஏற்படுத்தி தரவேண்டும், உற்பத்தியாளர்கள் மத் திய அரசின் கயிறு போர்டு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பெடரேஷன் ஆப் தமிழ் நாடு காயர் அசோசி யேஷன் தலைவர் பூச்சாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில் சங்க துணைத் தலைவர் சண்முகம் நன்றியுரை ஆற்றினார்.

மேலும் தொழிலுக்கு தேவையான ஜிஎஸ்டி மற்றும் தணிக்கை தொழில் கடன், சோலார் பற்றிய விளக்கங்கள் மற்றும் உபகரணங்கள் கண்காட்சி நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img