fbpx
Homeபிற செய்திகள்சென்னையில் 14 ஏக்கரில் காக்னிசன்டின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்

சென்னையில் 14 ஏக்கரில் காக்னிசன்டின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்

காக்னிசன்ட் நிறுவனம் சென்னையில் உள்ள அதன் சிறுசேரி வளாகத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது வல்லுனர்களின் திறன் மேம்பாடு மற்றும் பணி முன்னேற்றத்திற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

நிறுவனத்தின் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ள சிறுசேரி வளாகத்தில் நிறுவப்படும் இம்மையம் மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும் 100,000 நபர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த மையத்தில் 14,000 இருக்கைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள், இன்குபேட்டர் மையங்கள் மற்றும் நல்வாழ்வு வசதிகள் ஆகியவை இடம்பெறும். “ஹப் அண்ட் ஸ்போக்“ மாதிரியில் செயல்படும் இம்மையம் ஹைதராபாத், புனே, கொச்சி மற்றும் கோயம்புத்தூரில் உள்ள வளாகங்களில் உருவாக்கப்படும் பிற கற்றல் மையங்களையும் உள்ளடக்கி செயல்படும்.


இந்த செயற்கை நுண்ணறிவு காலத்தில் தனது தனித்துவ திறன்களே தலைவர்களையும் மற்றவர்களையும் வேறுபடுத்திக் காட்டும் என்று காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிகுமார் கூறினார்.

2024ம் ஆண்டில், காக்னிசண்ட் அதன் திறன் மேம்பாட்டு அமைப்பின் மூலம் 277,000 துறை வல்லுநர்களுக்கு உதவியுள்ளது. 168,000 பேர் ஜென் ஏஐ சார்ந்த படிப்பை முடித்துள்ளனர். இன்றுவரை, 220,000 நிபுணர்கள் ஜென் ஏஐ-யில் திறன் மேம்பாடு பெற்றுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img