கோயமுத்தூர் அட்வர்டைசிங் அகாடமி (CAA), கோவை அட்வர்டைசிங் கிளப் மற்றும் பிஎஸ்ஜி மேலாண்மை கல்லூரி ஆகியவை இணைந்து விளம்பரப் பணிக்கான முன்னோடிச் சான்றிதழ் படிப்பு உருவாக்கப்பட்டு வகுப்புகள் துவங்கப்படுகிறது.
விளம்பரத்துறையில் ஆர்வம் உள்ள இன்றைய துடிப்புமிக்க மாணவர்கள், தொழில்துறையினர், புதியவர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்து வதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த உள்ளனர்.
இந்த மூன்று மாத படிப்பு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19ம் தேதி கோவையில் தொடங்கப் படுகிறது. பணிபுரியம் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களுக்கென வடிவமைக்கப்பட்ட இப் பாடத் திட்ட வகுப்புகள் வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்படும்.
அனுபவம் வாய்ந்த தொழில்துறை ஜாம் பவான்கள் மற்றும் நிபுணத்துவம்மிக்க வல்லு நர்களால் நடத்தப் படும் இந்த வகுப்புகள், கல்வி அறிவுடன் நிஜஉலக நுண்ணறிவையும் இணைத்து வழங்கும்.
இதில் பங்கேற்பவர்கள் பாரம்பரியம் மற்றும் டிஜிட்டல் விளம்பர நுட்பங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்ட பாடத் திட்டம் மூலம் விளம்பர வரலாற்றின் அகழாய்வு, பொருளாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதலின் முக்கிய பங்கு பற்றிய ஆய்வு, ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் பிரசார திட்டமிடல், டிஜிட்டல் விளம்பர போக்குகள் குறித்த அதிநவீன நுட்பங்களை பெறமுடியும்.
விளம்பர அத்தியாவ சியங்களின் அம்சங்கள் குறித்து தொழில்துறை நிபுணர்கள் மற்றும் வருகை தரும் வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்படும் இந்த 3 மாத வகுப்பில் சேர விரும்புபவர்கள் பட்டதாரிகளாக இருக்க வேண்டும். கட்டணம் 30 ஆயிரம் ரூபாய். இந்த படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் விளம்பரத் தொழிலில் சிறப்புடன் விளங்கத் தேவையான தத்துவார்ந்த அறிவு, படைப்பாற்றல், மூலாதாரச் சிந்தனை, குறிப்பிட்ட பிராண்ட்களின் மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதலில் நிபுணத்துவத்தை வளர்க்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
விளம்பர ஜாம்பவான்களாக மாறுவதை நோக்கி செல்லும் உருமாற்றப் பயணத்திற்கு இந்த வகுப்பில் சேர்ந்து பயன டையுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு 94430 37879 மற்றும் 99942 25990 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்