fbpx
Homeபிற செய்திகள்கோவை அவினாசிலிங்கம் மகளிர் உயர்கல்வி நிறுவன விழா: முனைவர் சுதா ராமலிங்கத்துக்கு ‘முனைவர் ராஜம்மாள் பி.தேவதாஸ்...

கோவை அவினாசிலிங்கம் மகளிர் உயர்கல்வி நிறுவன விழா: முனைவர் சுதா ராமலிங்கத்துக்கு ‘முனைவர் ராஜம்மாள் பி.தேவதாஸ் ஆண்டு உரை விருது’

குழந்தை ஊட்டச்சத்து மற்றும் மனையியல் கல்விக்கான முன்னோடி பத்மஸ்ரீ முனைவர் ராஜம்மாள் பி.தேவதாஸ், அன்னாரது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்ந்து வழங்கப்படும் “முனைவர் ராஜம்மாள் பி.தேவதாஸ் ஆண்டு உரை விருது” சமூக மாற்றத்திற்கு அவரது அர்ப்பணிப்பை பிரதி பலிக்கும் முன்னோடியான சாத னையாளர்களை கௌரவித்து ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

இவ்விருது அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களும், அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனமும் இணைந்து 1999ஆம் ஆண்டு நிறு வப்பெற்றது.
பத்மபூஷண் அவினாசிலிங்கம், மனையியல் கல்லூரியை நிறுவிய நாள் தொட்டு நிறுவனத்திற்காக கடுமையாக உழைத்தவர் ராஜம்மாள் பி.தேவதாஸ், ஒரு சிறந்த சர்வதேச புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். அவர் 1988 முதல் 1994 வரை, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் முதல் துணைவேந்தராக பணியாற்றினார்.

பின்னர் 1994ஆம் ஆண்டிலிருந்து 2002 ஆம் ஆண்டு மார்ச் 17வரை, அவர் நிறுவனத்தின் வேந்தராகவும் நிர்வாக அறங்காவலராகவும் சேவையாற்றினார். குழந்தைகள் நலனுக்காகவும் மனையியல் கல் விக்காகவும் தீவிரமாக உழைத்த முனைவர் ராஜம்மாள், தமிழ்நாட்டில் நண்பகல் உணவுத் திட்டத்தை உரு வாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.
இந்தத் திட்டம் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தியதுடன், பள்ளி சேர்க்கை விகிதம் அதிகரிக்கவும், அதன் காரணமாக உயர் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் மாநிலத்தின் உற்பத்தி வளர்ச்சிக்கும் அடித்தளத்தை அமைத்தது என்பது நிதர்சனம்.
இந்த ஆண்டு “முனைவர் ராஜம்மாள் பி.தேவதாஸ் ஆண்டு உரை விருது” சமூக கல்வித் துறை பேராசிரியர் மற்றும் தலைவர், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநர், பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறு வனம் மற்றும் PSG FAIMER பிராந்திய நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சுதா ராமலிங்கத்துக்கு வழங்கப்பட்டது. ஸ்ரீ அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் உதவி நிர்வாக அறங்காவலர் முனைவர் கௌரி ராமகிருஷ்ணா தலைமை வகித்து விருதினை வழங்கி கௌரவித்தார்.
விருதினை ஏற்றுக்கொண்ட முனைவர் சுதா ராமலிங்கம் “வருங் கால இந்தியாவின் ஆதாரம்: தொற்றா நோய்களைத் தடுப்பதற்காக ஒன்றிணைந்து செயல்படுதல்” என்ற தலைப்பில் உரையை வழங்கினார். சிந்தனையைத் தூண்டும் அவர்தம் சொற்பொழிவில், தொற்றா நோய் களுக்கான பாரம்பரிய ஆபத்து காரணிகளை அவர் எடுத்துரைத்தார்.

மேலும் இளைய தலைமுறையில் கணிசமான சதவீதத்தினருக்கு இதுபோன்ற தொற்றா நோய்கள் வருவது ஒரு எச்சரிக்கை என்று கூறினார்.
பல்வேறு மக்களிடையே தொற்றா நோய்கள் குறித்த அறிவியல் அறிக்கைகளின் முக்கிய முடிவுகளைப் பகிர்ந்து கொண்ட அவர், பாரம்பரிய ஆபத்து காரணிகளான பரம்பரை, உடல் செயல்பாடு இல்லாமை மற்றும் ‘வேண்டா உணவு’ (junk food) மட்டுமல்ல, சுற்றுச்சூழல் மாசின் அதீத வெளிப்பாடு, பல்வேறு உணவுகளை எளிதாக அணுகுவதற்கான நடத்தை காரணிகள் மற்றும் இணையம் மற்றும் மொபைல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு போன்ற பல்வேறு புதிய காரணிகளும் இளைய மக்களிடையே தொற்றா நோய்கள் ஆரம்பத்திலேயே ஏற்படுவதற்குக் காரணம் என்று கூறினார்.
சமூகத்தில் கொண்டு வரப்படும் முறையான மாற்றங்கள் இந்தப் போக்கைத் தவிர்க்க உதவும் என்று அவர் வலியுறுத்தி இருதய நோய் தடுப்பு குறித்த உலகளாவிய முதல் பொது சுகாதார வடக்கு கரேலியா திட்டத்தின் நன்மை பயக்கும் விளைவை மேற்கோள் காட்டினார்.

துணைவேந்தர் முனைவர் வி.பாரதி ஹரிசங்கர் தனது உரையில், முனைவர் ராஜம்மாள் பி. தேவதாஸ் ஒரு உயரிய மரபை உருவாக்கினார் என்றும், அதை நிருவனத்தின் தற்போதைய தலைமுறையினர் நிலைநிறுத்த வேண்டும், பாதுகாக்க வேண்டும், போற்ற வேண்டும் என்றும் அத்தகைய மரபை நிலைநிறுத்த உயர்ந்த அளவுகோல்களை நிர்ணயித்து கடின உழைப்புடன் நிறுவனத்தை மென்மெலும் உயரத்திற்கு கொண்டு செல்வது அவசியம் என்றும் கூறினார்.
23வது டாக்டர் ராஜம்மாள் பி.தேவதாஸ் ஆண்டு சொற் பொழிவு மற்றும் உலக சுகாதார தினத்தின் ஒரு பகுதியாக சுகா தாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த போட்டிகள் ஏற்பாடு செய்யப் பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரமுகர்கள் பதக் கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.

முன்னதாக மனையியல் பள்ளியின் முதன்மையர் முனைவர் எஸ். அம்சமணி வரவேற்றார். பதிவாளர் முனைவர் எச். இந்து நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img