fbpx
Homeபிற செய்திகள்மானியத்துடன் கடன் பெற்ற தொழில் நிறுவனங்களில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆய்வு

மானியத்துடன் கடன் பெற்ற தொழில் நிறுவனங்களில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆய்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில், செயல்படுத்தப்பட்டு வரும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்(NEEDS), கீழ் மானியத்துடன் கடனுதவிகள் பெற்ற கணபதி, சிவானந்தபுரம், ராம்நகர், விளாங்குறிச்சி பகுதிகளை சேர்ந்த தொழில்மு னைவோர்களின் தொழில் நிறுவனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சண்முக சிவா, உதவி பொறியாளர் கணபதி சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வு குறித்து கூறியுள்ளதாவது:
கோயம்புத்தூர் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் புதியதொழில் முனைவோர் மற்றும் தொழில்நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் (NEEDS) 140 தொழில் முனைவோர்களுக்கு தொகை ரூ.36.13 கோடி கடனுதவியுடன் ரூ.6.74 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் மே-2023ல் தொடங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத் தின் (AABCS) மூலம் 76 தொழில் முனைவோர்களுக்கு ரூ.8.90 கோடி மானியத்துடன் ரூ36.25 கோடி கடனுதவி வழங்கப்பட் டுள்ளது.
கடந்த மூன்றரை ஆண்டு களில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில்நிறுவன மேம் பாட்டுத் திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகிய திட் டங்களின் மூலம் மொத்தம் 216 நபர்களுக்கு ரூ.15.64 கோடி மானியத்துடன் கூடிய ரூ.72.38 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம் பாட்டுத்திட்டத்தின் (NEEDS) கீழ் ரூ.1.68 கோடி வங்கியின் மூலம் கடனு தவி பெற்று மானிய மாக ரூ.41.94 லட்சம் பெற்று கணபதி பகுதியில் அமைந் துள்ள எர்பிளாஃக் நிறுவனம் உலோக தகடு உற்பத்தித் தொழில் நிறுவனத்தையும், ரூ.38.66 லட்சம் வங்கியின் மூலம் கடனுதவி பெற்று மானியமாக ரூ.8.80 லட்சம் பெற்று கணபதி பகுதியில் அமைந்துள்ள கிரீன்டெக்னலாஜி நிறுவனம் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தித் தொழில் நிறுவனத்தையும், ரூ.1.82 கோடி வங்கியின் மூலம் கடனுதவி பெற்று மானியமாக ரூ.40.25 லட்சம் பெற்று சிவானந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள டெஸ்லா ஸ்கேன் மையம் மருத்துவ ஸ்கேனிங் சேவைத் தொழில் நிறுவனத்தையும், அண் ணல் அம்பேத்கர் தொழில் முன் னோடிகள் திட்டம்(AABCS)கீழ் ரூ.242.00 லட்சம் வங்கி யின் மூலம் கடனுதவி பெற்று மானி யமாக ரூ.62.37 லட்சம் பெற்று கோயம்புத்தூர் மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியில் அமைந் துள்ள ஜெனரிக்ஆட்டோ மெக் இண்டஸ்ட்ரிஸ் பிரைவேட் லிட் ஆட்டோமொபைல் உதிரிபாகங் கள் உற்பத்தித் தொழில் நிறுவனத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img