fbpx
Homeபிற செய்திகள்பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டு காரம்போர்டு விளையாடி குறைகளை கேட்டறிந்த கோவை மாவட்ட...

பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டு காரம்போர்டு விளையாடி குறைகளை கேட்டறிந்த கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக பள்ளி மாணவர்களுடன் காலை உணவு திட்டத்தை ஆய்வு மேற்கொண்ட பின்பு மாணவருடன் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது குழந்தைகள் உணவை சிந்தாமலும் சிதறாமலும் சாப்பிடுவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களை பார்வையிட்டார். தொடர்ந்து மாணவர்களுடன் கேரம் போர்டு உள்ளிட்ட விளையாட்டுகளை சிறிது நேரம் விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img