fbpx
Homeபிற செய்திகள்கோவை டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்ப கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா

கோவை டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்ப கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா

டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா, டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நேற்று (21ம் தேதி) நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக, டாக்டர் டி.பழனிக்குமார் (டீன், கணினி அறிவியல்) வரவேற்புரை வழங்கினார். டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலை வர் டாக்டர் நல்ல. ஜி.பழனிசாமி தலைமை வகித்தார்.

தலைமை விருந்தினராக காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் கோவை மையத் தலைவர் மாயா ஸ்ரீகுமார் மற்றும் கவுரவ விருந்தி னராக கோவை சிவா டெக்ஸ்யார்ன் நிறுவன நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.எஸ்.சுந்தரராமன், ஆகி யோர் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழாவின் சிறப்புரையை வழங்கினார்கள்.

மாயா ஸ்ரீகுமார் பேசுகையில், “தொழில்நுட்பம் தொடர் ந்து வளர்ச்சி யடைந்து வருகிறது. நீங்கள் இன்று கற்றுக் கொண்ட நிரலாக்க மொழிகள், மென்பொருள் கருவிகள் நாளை மாற்றமடையலாம். உங்கள் ஆர்வத்தை நிலைநிறுத்திக் கொள்ளுங்கள், தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள், புதிய கண்டுபிடிப்புகளுக்கு திறந்த மனதுடன் இருங்கள்.” எனக் மூலம் மாணவர்களை ஊக்குவித்தார். டாக்டர் கே.எஸ்.சுந்தரராமன் தமது உரையில், “உங்கள் எதிர் கால பாதையில் வாய்ப்புக ளும் சவால்களும் இருக்கும். அவற்றை தன்னம்பிக்கையுடனும், உறுதிப்பாட்டுடனும் எதிர்கொள்ளுங்கள்” என தெரிவித்தார். நடப்புக் கல்வியாண்டுக்கான ஆண்டறிக்கையை, என்ஜிபி தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.யு.பிரபா சமர்ப்பித்தார். டாக்டர் என்.ஜி.பி. கல்வி குழுமங்களின் கல்லூரிச் செயலாளரும் அறங்காவலருமான டாக் டர் தவமணி டி.பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார்.

டாக்டர்.என்.ஜி.பி. கல்வி குழுமங்களின் அறங்காவலர்களில் ஒருவரான டாக்டர் அருண் என்.பழனிசாமி பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினார். இந்தப் பட்டமளிப்பு விழாவில் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் இருந்து இளநிலை பட்ட வகுப்புகளில் பயின்ற மாணவ, மாணவியர்கள் தங்களது பட்டங்களைப் பெற்றனர். இப் பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவர்களும் பேராசிரியர்களும் பெற்றோர்களும் கலந்து கொண் டனர்.

படிக்க வேண்டும்

spot_img