fbpx
Homeபிற செய்திகள்கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளி மாணவிகளுக்கான கோகோ போட்டி எம்டிஎன் ஃப்யுச்சர் பள்ளி முதலிடம்

கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளி மாணவிகளுக்கான கோகோ போட்டி எம்டிஎன் ஃப்யுச்சர் பள்ளி முதலிடம்

கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளுக்கு இடையேயான மாணவி யர்களுக்கான கோகோ போட்டிகள் ஸ்ரீ விநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைபெற்றது. துவக்கவிழாவில் பள்ளி முதல்வர் சர்லின் வரவேற்று பேசினார். பள்ளி நிர்வாக அலுவலர் நிர்மலா தேவி விழாவினை தொடங்கி வைத்தார். இப்போட்டியில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 1200க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியானது பெண்கள் பிரிவில் 12 வயது, 14 வயது, 16 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்ட நான்கு பிரிவுகளில் நடத்தப்பட்டது.

மாணவியர் 12, 14, 19 வயதுகுட்பட்ட பிரிவில் எம்டிஎன் ஃப்யுச்சர் பள்ளி முதலிடத்தைப் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

14 வயதுகுட்பட்ட பெண்கள் பிரிவில் வாலரைகேட் பள்ளி முதலிடத்தைப் பிடித்தது. வெற்றிப் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பள்ளித் தாளாளர் சோமசுந்தரம் கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார்.

அத்துடன் ஸ்ரீ விநாயகா வித்யாலயா சி.பி.எஸ் .இ பள்ளியைச் சார்ந்த 16 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவினர் மூன்றாம் இடம் பிடித்து பள்ளிக்கு பெருமைச் சேர்த்தனர் வெற்றி பெற்ற மாணவியரை பள்ளித் தாளாளர் சோமசுந்தரம் , பள்ளி நிர்வாக அலுவலர் நிர்மலாதேவி, பள்ளி முதல்வர் சர்லின், துணை முதல்வர் சுமதி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த் துகளைத் தெரிவித்தனர். இறுதியாக உடற்கல்வி ஆசிரியர் ராம்குமார் நன்றியுரை கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img