fbpx
Homeபிற செய்திகள்கோவை சிறுதுளி அமைப்பு சார்பில் ‘நல்ல தண்ணீ ’திட்டம் அறிமுகம்

கோவை சிறுதுளி அமைப்பு சார்பில் ‘நல்ல தண்ணீ ’திட்டம் அறிமுகம்

சிறுதுளி அமைப்பு கழிவு நீரை திறம்பட சுத்திகரிக்க கோவை மாநகராட்சிக்கு 4 நிலையான தீர்வுகளை பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து சிறுதுளி யின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் பேசு கையில், “கோவையில் சிறுதுளி கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாக சாத்தியமான கழிவுநீர் சுத்திகரிப்பு தீர்வுகளை ஆய்வு செய்து வருகிறது. இதன் விளைவாக கடந்த ஆண்டு “நல்ல தண்ணீ” திட்டம் தொடங்கப்பட்டது. இந்த முயற்சி கழிவுநீரை திறம்பட மீண்டும் பயன் படுத்தக்கூடிய வகையில் சுத்திகரிப்பதில் கவனம் செலுத்துகிறது” என்றார்.
சிறுதுளியின் அறங்காவ லர் சதீஷ், தண்ணீரை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வளமாக பார்க்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.

சிறுதுளியின் வழிகாட்டு தல் குழுவின் உறுப்பினர் கிருஷ்ணசாமி, தன்னார்வ தொண்டு நிறுவனம் பரிந்துரைத்த 4 முக்கிய தீர்வுகளை வழங்கினார்.
இந்நிலையில் இந்த அமைப்பு சுண்டபாளையம் பெரியபள்ளத்தில் வெட்டி வேரை பயன்படுத்தி கழிவு நீரை சுத்திகரிக்கும் முறை யை ஆய்வு செய்துள்ளது.
கழிவுநீர் சுத்திகரிப்பு முறையை குறிச்சி குளத்திற்கு பரிந் துரைக்கப்பட்டு, திட்ட அறிக்கை தயாரித்து செய் யல்படுத்த ஒருங்கிணைத்து வருகிறது. நஞ்சுண்டாபுரம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 10 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீரை சிங்காநல்லூர் குளத்தில் நிரப்ப மாநகராட்சி ஆணை யருக்கு பரிந்துரைக்கப்பட் டுள்ளது. இப்படி பல்வேறு ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img