fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்டேபிள்ஸ் தென்னிந்திய முன்னணி அகாடமி என்ற பட்டத்தை கைப்பற்றி சாதனை

கோவை ஸ்டேபிள்ஸ் தென்னிந்திய முன்னணி அகாடமி என்ற பட்டத்தை கைப்பற்றி சாதனை

2024ம் ஆண்டின் ஜூனியர் தேசிய குதிரை ஏற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் கோவை ஸ்டேபிள்ஸ் எட்டு வெற்றி பதக்கங்களை தட்டிச்சென்றது.

சில்ரன் 2 கேட்டகிரியில் அர்ஷத் 2 தங்கம், 1 வெண்கலம், கபிலேஷ் 1 வெண்கலம், ஹர்ஷித் 1 வெண்கலம், ப்ரத்திக் 4வது இடம், திவ்யேஷ் ராம் 4வது இடம் என மொத்தம் 131 பதக்கங்களை பெற்று கோவை ஸ்டேபிள்ஸ் 2024-ன் தென்னிந்திய முன்னணி அகாடமி என்ற பட்டத்தை கைப்பற்றினர்.

தென்னிந்தியாவின் முன்னணி குதிரை ஏற்ற பயிற்சி மையமான கோவை ஸ்டேபிள்ஸ், 2024-ம் ஆண்டில் அசாத்திய சாதனைகளைப் படைத்து, இந்திய குதிரை ஏற்ற விளையாட்டில் தங்களின் முன்னணி நிலையை மேலும் உறுதி செய்துள்ளது.
புதிய உயர சாதனை, பல வெற்றிகள் மற்றும் மெடல்கள் மூலம் அவர்கள் புதிய மைல்கற்களை அடைந்துள்ளனர்.

இது ஆண்டின் சிறப்புகளை முன்னிறுத்தும் வகையில், ஹர்ஷித் தனது குதிரையுடன் 185 செ.மீ உயரத்தில் பாய்ந்து, 2024-ல் இந்தியாவின் மிக உயர்ந்த குதிப்பு சாதனையை EPL கிராண்ட் ஃபைனலில் நிகழ்த்தினார்.
அதேநேரம் ஆராதனா உலக அளவில் FEI சில்ரன் கிளாஸிக் ப்ரோன்ஷ் டவரில் முதலிடம் பெற்று நாட்டை பெருமைப்படுத்தினார். இந்த வெற்றி கோவை ஸ்டேபிள்ஸின் சர்வதேச தரமான பயிற்சியை பிரதிபலிக்கிறது.மேலும், இந்த ஆண்டு போட்டிகளில் மாணவர்கள் ரூ.5,00,000 பரிசு தொகையை வென்றுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img