ஸ்கூல் கேம் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற 68 வது தாங்-டா போட்டி மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக அணியில் இருந்து 12 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கோவை இம்மார்டல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 4 பேர் கலந்து கொண்டனர்.
அதில் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மேரி பிரியதர்ஷினி கிருஷ்ணம்மாள் பெண்கள் மேல் நிலைப் பள்ளி (under 66 kg) வெள்ளி பதக்கம் வென்றார். 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் நேத்ரா ஸ்ரீ விசிவி மெட்ரிக் பள்ளி (Under- 41 kg) வெள்ளி பதக்கம் வென்றார். மாணவர்கள் பிரிவில் தரணீதரன் விமல்ஜோதி கான்வென்ட் மெட்ரிக் பள்ளி (under 40 kg) வெண்கலப் பதக்கம் வென்றார். போட் டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பயிற்சி யாளர்கள் சரண்ராஜ், ரஞ்சித் குமார் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தினர்.