fbpx
Homeபிற செய்திகள்கோவை வர்த்தக கண்காட்சியில் வாக்கரூவின் 1000 புதிய தயாரிப்புகள் அறிமுகம்

கோவை வர்த்தக கண்காட்சியில் வாக்கரூவின் 1000 புதிய தயாரிப்புகள் அறிமுகம்

வாக்கரூ தனது புதிய பிராண்டு தூதரான கல்யாணி பிரியதர்ஷனுடன் இணைந்து தமிழகத்திற்காக 1000க்கும் அதிகமான புதிய காலணி மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கோடை பருவத்திற்கான சில புதிய வரவுகள் பாதங்களுக்கு ஏற்ப வசதியையும் ஸ்டைலையும் வழங்கும் வகையில் புதிய டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாக்கரூ பிளிப்-ப்ளாப்ஸ் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இலகுவான நவீன இவிஏ மாடல்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்கரூ ஸ்போர்ட்ஸ் ஹெல்தி வாழ்க்கை முறைக்கு ஏற்ற நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய அதிநவீன ஸ்போர்ட்ஸ் ஷூ மாடல்கள் காலணிகளை தயாரிப்பதில் வாக்கரூ அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இது குறித்து வாக்கரூ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நௌஷாத் கூறுகையில், “தமிழ்நாட்டில் எங்கள் பிராண்டிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே தமிழக மக்களின் விருப்பத்திற்கேற்ப 1000 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

இது குறித்து நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கூறுகையில், “வாக்கரூ இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு பல்வேறு புதிய வகையான தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img