ரத்தினம் கல்லூரியில் உடற் கல்வி இயக்குநராகப் பணிபுரியும் ஜாய்சி மற்றும் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியில் உடற்கல்வி இயக்குநராகப் பணிபுரியும் ஜெயசித்ரா உட்பட 64 வீராங்கனைகள் கொண்ட தமிழக கூடைப்பந்து அணி கோவாவில், பிப்ரவரி 8 முதல் 13 வரை நடைபெற்ற 6வது தேசிய அளவிலான மாஸ்டர்ஸ் கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியில் அனைத்து பிரிவி லும் பங்கேற்று வெற்றி வாகை சூடி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். கோவைக்கும் தங்களது கல்லூரிக்கும் பெருமை சேர்த் துள்ளதை அடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் இருவரையும் வெகுவாக பாராட்டினர்.