fbpx
Homeபிற செய்திகள்சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் பிருந்தாதேவி ஆய்வு

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் பிருந்தாதேவி ஆய்வு

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி செய்தியாளர் பயணத்தின்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல் படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கோடைக்காலம் தொடங் கியுள்ள நிலையில் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்றிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருவது அரசு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து குடிநீர் தேவையை கருத்திற்கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், பள்ளிகள் உட்கட்டமைப்புத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கலைஞர் கனவு இல்லம், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத்திட்டம் உள் ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.249.34 கோடி மதிப்பீட்டிலான 6,768 திட்டப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 4,836 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 1,932 பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில், இன்றையதினம் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், ஆரியபாளையம் ஊராட்சியில் 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.54.75 லட்சம் மதிப்பீட்டில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார ஆய்வகத்திலும், கிராமப்புற வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் ஆரியபாளையம் ஊராட் சியில் 2 வீடுகள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் வீரகவுண்டனூர் ஊராட்சிக்கு ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவ லகக் கட்டத்தினையும், பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் வீர கவுண்டனூர் ஊராட்சியில் ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் ஊத்துக்காடு சாலை வழியாக வீரகவுண்டனூர் மற்றும் ஓலப்பாடி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினையும், நபார்டு திட்டத்தின் கீழ் தும்பல் ஊராட்சியில் ரூ.35.30 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிகள் நடை பெற்று வருவதையும் நேரில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
15வது நிதிக்குழு மானியத் திட் டத்தின் கீழ் ரூ.4.90 லட்சம் மதிப் பீட்டில் தும்பல் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய சுகாதார வளாகத்தினையும், எடயப்பட்டி ஊராட்சியில் ரூ.7.30 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கட்டப்பட்டுவரும் விற்பனை நிலையத்தினையும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.18.42 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும், வெள்ளாளப் பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.7.22 லட்சம் மதிப்பீட்டில் லிங்கம் கடையிலிருந்து கொம்பையன் வீடு வரையிலும், முனியப்பன் வீட்டிலி ருந்து முருகன் வீடு வரையிலும் பேவர் பிளாக் அமைக்கப்பட்டுள்ள பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

அதேபோன்று, ஏத்தாப்பூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்டுவரும் பயணியர் நிழற்கூடம், பனைமடல் ஊராட்சியில் அமைக்கப்பட்டு வரும் நாற்றங்கால், பனைமடல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சுற் றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவும், குடிநீர் தொடர்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துப் பணியாற்றிடவும் தொடர் புடைய அலுவலர்களுக்கு இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img