fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் சிட்கோ தொழிற்பேட்டையில் செய்தியாளர்களுடன் ஆட்சியர் உமா ஆய்வு

நாமக்கல் சிட்கோ தொழிற்பேட்டையில் செய்தியாளர்களுடன் ஆட்சியர் உமா ஆய்வு

நாமக்கல் – பரமத்தி சாலையில் அமைந்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான நாமக்கல் சிட்கோ தொழிற்பேட்டையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, செய்தி யாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, வேட்டம்பாடி மற்றும் இராசம்பாளையம் உள்ளிட்ட 4 இடங்களில் சிட்கோ தொழிற் பேட்டைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற் பேட்டைகளில் 120 மேம்படுத்தப்பட்ட தொழில்மனைகள் மற்றும் 49 தொழிற்கூடங்கள் உருவாக்கப்பட்டு 105 மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள் மற்றும் 49 தொழிற்கூடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இத்தொழிற்சாலைகள் மூலம் சுமார் 400 ஆண்கள், 150 பெண்கள் என மொத்தம் 550 நபர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். மறை முகமாக 500 தொழி லாள ர்கள் பணி வாய்ப்பு பெற்று பயன்பெற்று வருகின்றனர்.

நாமக்கல் தொழிற் பேட்டை 1979 ஆம் ஆண்டு 10.09 ஏக்கரில் தொடக்கப்பட்டு 23 மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள், 24 தொழிற்கூடங்களுடன் செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்பேட்டையில் காலணி தயாரித்தல், இன்ஜினியரிங், லாரி பாடி கட்டுமான பணிகள், நூலிழைகள் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, நாமக்கல் & பரமத்தி சாலையில் அமைந்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான (சிட்கோ) தொழிற் பேட்டையில் உள்ள தொழில் கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உற்பத்தி மற்றும் தயாரிப்பு பொருட்கள் குறித்த விபரம், ஏற்றுமதி, இறக்குமதி பொருட்கள் விபரம், நிறுவனத்தில் பராமரிக்கப்படும் பதிவேடு கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img