கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியின் வணிகவியல் துறை மற்றும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி இணைந்து நடத்தும் இரண்டு நாள் தொழில்துறை மற்றும் கல்லூரி இணைப்பு மாநாடு நடைபெற்றது.
முதல் நாளில் கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலர் பி.என்.வெங்கடாசலம் தலைமையில் தொடங்கிய நிகழ்ச்சியில், முக்கிய விருந்தினர்களாக சக்தி குழும உரிமையாளர் முனைவர் எம். மாணிக்கம், இந்திய ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் ஆர்.கணேஷ் குமார், ஐபிஎம் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப பணியாளர் ஆர்.ராம் குமார், தொழில் நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் எஸ்.ஏ.பசுபதி, மற்றும் ஸ்ரீ பாரியூர் அம்மன் காகித தொழிற்சாலையின் உரிமையாளர் முனைவர் கே.எம்.சண்முகப் பெருமாள், ஜெகன் மெட்டல் மார்ட் உரிமையாளர் ஜெகநாதன், துணை முதல்வர் எஸ்.ஏ.தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து பேசினார்கள்.