fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு புதிய நிர்வாகிகள்

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு புதிய நிர்வாகிகள்

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு புதிய நிர்வாகிகள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் மயூரா எஸ் ஜெயக்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் கோவை காமராஜ் பவனில் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலை வர் வக்கீல் கருப்புசாமி தலைமையில் நடந்தது.

மாவட்ட வக்கீல் அணி தலைவர் ஜெரோம் ஜோசப், மாநில வக்கீல் அணி பொதுச்செயலாளர் மதனசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணை தலைவர்களாக ஷமீம், மகேந்திரன், கணேசன், பொதுச் செயலாளர்களாக பர் கத்துல்லா, சம்பத் குமார், ஸ்டெபினா, செயலாளர்களாக சித்ரா, ராஜா மணிகண்டன், சக்திவேல், முத்து, பாலாஜி பொருளாளராக சசிரேகா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார், மா நகர் மாவட்ட பொதுச் செயலாளர் தமிழ்ச் செல்வன், காந்தகுமார், அஸ்மத்துல்லா, ரிஸ்வான், சச்சின் சிவக்குமார், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img