ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு நிதி உதவியுடன் செயல் பட்டு வரும் தீன்தயாள் உபாத் யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களின் 2.0 வடிவத்துடன் 2025-26ம் ஆண்டிற்கான செயல்திட் டங்கள் குறித்த கருத்தரங்கு துவக்க விழா நேற்று (27ம் தேதி) ஊட்டியில் நடைபெற்றது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கு இன்றும் (28ம் தேதி) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இக்கருத்தரங்கில், மத்திய ஊரக அமைச்சகத் தின் திறன் பயிற்சி திட்டம் சார்ந்த அலுவலர்கள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, ஆந்திரபிரதேசம், தெலுங் கானா ஆகிய மாநிலங்கள் மற்றும் அந்தமான் – நிக் கோபார், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.திவ்யதர்ஷினி வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், இளைஞர்களின் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து திறன் பயிற்சி அளித்து பயிற்சி அளித்த நிறுவனங்களிலேயே வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை பெரும் அளவில் முன்னெடுத்துச் செல்ல உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் பங்கஜ் யாதவ் தனது தலைமை உரையில், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஊக்குவிக்கும் வகையிலும் வளர்ந்துவரும் தொழில் நிறுவனங்களின் திறன் தேவைகளை கருத் தில் கொண்டும் திறன் பயிற்சி திட்டங்களின் தற்போதைய திட்டக் கூறுகளில் திருத்தங்கள் மேற் கொண்டு நடப்பாண்டு முதல் தீன்தயாள் உபாத் யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டமும், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களும் புதுப்பிக் கப்பட்ட 2.0 வடிவத்தில் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தேசிய தகவல் நிலையத்தின் இணை பொது செயலாளர் சஞ்சய் குமார் பாண்டே, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஸ்ரேயா பி சிங், தீன்தயாள் உபாத் யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் ஒன்றிய அரசின் சார்பு செயலாளர் சுதிப்த் ஆகியோர் கலந்து கொண்டு 2.0 வடிவ மைப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இக்கருத்தரங்கு தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இறுதியாக ஆர்.சங்கர் (கூடுதல் இயக்குநர் DDU-GKY) நன்றி கூறினார்.