நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 28 வது வார்டு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. சாலையை நகர மன்ற தலைவர் ஷீலா கேத்தரின் ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இநிகழ்ச்சியில் நகர செயலாளர் ராமசாமி நகர மன்ற துணை தலைவர் வாசிம்ராஜா நகரமன்ற உறுப்பினர் மணிகண்டன் நகர துணை செயலாளர் முருகேஷ் மற்றும் கிளை கழக செயலாளர் லியாகத் அலி, பழனி, மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.
இந்த பகுதி நகர மன்ற உறுப்பினர் சையது மன்சூர் கூறுகையில் முதலில் இந்த திட்டம் செயல்வடிவம் காண நிலம் வழங்கிய நில உரிமையாளர்களுக்கும், இத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உறுதுணையாக மற்றும் மூன்றில் ஒரு பங்கு தொகையை என்னை நம்பி என்னிடம் வழங்கிய மக்களுக்கும் இந்த பணி முறையாக முழு தரத்துடன் நடைபெற காரணமாக இருந்த நகர மன்ற தலைவர் துணை தலைவர், நகராட்சி ஆணையாளர் நகராட்சி பொறியாளர், நகராட்சி இளநிலை பொறியாளர், பணி ஆய்வாளர் ஆகியோருக்கும், ஒப்பந்ததாரர் அவர்களுக்கும் நன்றி எனத் தெரிவித்தார்.