fbpx
Homeபிற செய்திகள்கோவை அருகே ஊருக்குள் புகுந்த யானைக் கூட்டம்: பொதுமக்கள் அச்சம்

கோவை அருகே ஊருக்குள் புகுந்த யானைக் கூட்டம்: பொதுமக்கள் அச்சம்

கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை வடவள்ளி காவல் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகு தியில் நேற்றிரவு காட்டு யானை கூட்டம் புகுந்தது. யானைகள் வீட்டின் அருகில் பயிரிடப்பட்டு இருந்த வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது.

வீட்டின் அருகில் யானைகள் மேய்ச்சலில் ஈடுபட்டதால் குடியிருப்புவாசிகள் அச்சத்து டன் மொட்டைமாடிக்கு சென்றனர்.

வாழை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்ட யானைகள் பின்னர் அங்கிருந்து சென்றன. வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு அவர்கள் வராததால் பொது மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

வனத்துறையினர் யானை கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் இருப்பதால் இதுபோல அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுவதாகவும், திறம்பட செயல்படும் வனத்துறையினரை இந்த பகுதியில் பணியமர்த்த வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img