ஆகாஷ் பைஜுவின் 2023-ம் ஆண்டுக் கான, ஆகாஷ் நேஷனல் டேலன்ட் ஹண்ட் எக்ஸாம் எனும் ஆந்தே தேர்வுகள் வரும் அக்டோபர் மாதம் 7-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது என ஆகாஷ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆந்தே திறன் தேர்வுகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு வழிமுறைகளில் இத்தேர்வுகள் நடை பெறுகின்றன. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு, கோவை அவினாசி சாலையில் உள்ள ஆகாஷ் பைஜு மையத்தில் நடைபெற்றது.
இதில் ஆகாஷ் பைஜுவின் இணை இயக்குநர் குடே சஞ்சய் காந்தி, உதவி இயக்குநர் ஸ்ரீனிவாச ரெட்டி, ஏரியா விற்பனை மேலாளர் ராம்கி, கிளை மேலா ளர் கோபிநாத், ஆர்.எஸ்.புரம் கிளைத் தலைவர் செந்தில், மக்கள் தொடர்பு தலைவர் வருண் சோனி ஆகி யோர் பேசினர்.
7-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்காக 14-வது பதிப்பாக நடைபெறும் இத்தேர்வில் 100 சதவீதம் வரை ஸ்காலர்ஷிப்கள் வழங்கப்படும். ரொக்கப் பரிசுகள் 700 மாணவர்களுக்கு தரப்படும்.
பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு தேசிய அறிவியல் சாகசப் பயணத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். கடந்த ஆண்டு 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினர்.
இந்த வருடம் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் இதில் கலந்து கொள்ள உள்ளனர். தேர்வுகளில் கலந்து கொள்வதால் தேசிய தேர்வுகளான நீட், ஜே.இ.இ.போன்ற தேர்வுகளை எளிதில் எதிர் கொள்ள முடியும்.
இதற்கு சான்றாக பல மாணவர்கள் தேசிய அளவிலான தேர்வுகளில் சாதித்துள்ளனர். மாணவ, மாணவிகளின் சிறந்த எதிர்காலத்திற்கு பயன்படும் வகையிலான இந்த தேர்வுகளை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றனர்.