அண்ணா பல்கலைக்கழகத் துக்கு உட்பட்ட மண்டல கல்லூரிகளுக்கு இடையே யான மகளிருக்கான கால்பந்து போட்டி பெரியநாயக்கன்பா ளையம் யுனைடெட் தொழில் நுட்பக் கல்லூரியில் நடந்தது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 13 அணிகள் பங்கு பெற்றன.
மதுரை தியாகராஜா கல்லூரி, அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி, திருச்சி, பி எஸ் என் ஏ கல்லூரி, பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி, கொங்கு நாடு தொழில்நுட்ப கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப, தன லட்சுமி சீனிவாசன் கல்லூரி, அண்ணா மண்டல கலலூரி கோவை ஆகிய அணிகள்பங்கு பெற்றன.
நேற்று அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
முதல் அரை இறுதி போட்டியில் கொங்கு நாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணியும் திண்டுக்கல் பிஎஸ் என்ஏ கல்லூரி அணியும் விளையாடின இந்தப் போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி வெற்றி பெற்றது, இரண்டாவது அரை இறுதி போட்டியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த எம் பி என் எம் ஜெ பொறியியல் கல்லூரி அணியும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணா பல்கலைக்கழக மண்டல கல்லூரி அணியும் விளையாடினர்.
இந்தப் போட்டியில் 6-&0 என்ற கோல் கணக்கில் எம் பி என் எம் ஜெ அணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இறுதிப் போட்டி யில் எம் பி என் எம் ஜெ அணி ஒரு கோல் போட்டு கொங்கு நாடு பொறியியல் கல்லூரி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இரண்டாம் இடத்தை கொங்குநாடு பொறியியல் கல்லூரி திருச்சி அணியும் மூன்றாம் இடத்தை பிஎஸ்என்ஏ திண்டுக்கல் அணியும் நான்காம் இடத்தை அண்ணா பல்கலைக்கழக மண்டல கல்லூரி திருச்சி அணியும் பெற்றிருந்தது.
போட்டியின் முடிவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு யுனைடெட் தொழில்நுட்ப கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு சண்முகம் முதல்வர் முனைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் . விழாவிற்கு வந்த அனைவரையும் உடற்கல்வி இயக்குனர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.