fbpx
Homeபிற செய்திகள்விவசாயப் பெண்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

விவசாயப் பெண்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனம், தேசிய கண்டுபிடிப்பு அறக் கட்டளையுடன் இணைந்து கோவை மாவட்டத்தில், பல்வேறு விரிவாக்கச் செயல்பாடுகள் மூலம் ஆய்வை நடத்துகிறது.
இத்திட்டம் கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

கோவையில் 10 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத் தப்பட்டுள்ளன. அடுத்த கட்டப் பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயப் பெண்கள் மற்றும் சுய உதவிக் குழு பெண்களுக்கு தென்னை மரம் ஏறும் கருவி, தேங் காய் உடைக்கும் கருவி, ஜி-பஸாந்த் சிவப்பு நிற கொய்யா மரக்கன்றுகள் என ஒவ்வொரு கண்டுபிடிப் புகள் வழங்கப்படும். இந்த கண்டுபிடிப்புகளில் அவர்களின் வாழ்வாதாரத்தின் முன்னேற்றம் குறித்து பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.

இத்திட்டம் நிறைவடைந்த போதும், அவினாசிலிங்கம் மனையியல் பல்கலைக் கழகம் அவர்களுக்கு தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஆலோசனை வழங்கும்.
முதன்மை ஆய்வாளர் முனைவர் சு.கௌசல்யா, பதிவாளர் மற்றும் பேராசிரியர், உணவு மற்றும் சத்துணவுத்துறை, தலைமையில் தொட்டபாவி கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

துணை ஆய்வாளர், முனைவர் சு.திலகவதி, துணைப் பேராசிரியர், உணவு மற்றும் சத்துணவுத் துறை, தலைமையில் குப்பிச்சிபாளையம் கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

படிக்க வேண்டும்

spot_img