fbpx
Homeபிற செய்திகள்கோவை பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியில் எட்டாவது பட்டமளிப்பு விழா: பேராயர் திமோத்தி ரவீந்தர் பட்டம்...

கோவை பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியில் எட்டாவது பட்டமளிப்பு விழா: பேராயர் திமோத்தி ரவீந்தர் பட்டம் வழங்கினார்

கோவை சி.எஸ்.ஐ. பிஷப் அப்பாசாமி கல் வியியல் கல்லூரியில் நடைபெற்ற எட்டாவது பட்டமளிப்பு விழாவில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பட்டங்களை பெற்றனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் பிஷப் அப்பா சாமி கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இங்கு கல்வியியல் பயின்ற மாணவ மாணவிகளுக்கு 8வது பட்டமளிப்பு விழா உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள இமானுவேல் சி.எஸ்.ஐ ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கல்லூரியின் சேர்மன் மற்றும் கோவை திருமண் டல பேராயர் திமோத்தி ரவீந்தர் பங்கேற்று 240 மாணவ மாணவிகளுக்கு இளங்கலை கல்வியியல் பட்டங்களை வழங்கினார்.

தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், பட்டப்படிப்பு தங்களின் வாழ்க்கையை உயர்த்தும் எனவும், அதே போல நாம் கற்கும் கல்வி நம் வாழ்க்கையை மட்டுமல்லாமல் நமது பொருளாதார தரத்தையும் உயர்த்தும் என தெரிவித்த அவர் சமுதாயத்தில் ஆசிரியர்கள் மதிப்பு மிக்க வர்களாக கருதப்படுகின்றனர்.

மாணவர்களிடம் சமூக அக்கறைகள் ஏற்படுத்துவதுடன், அவர் களின் வாழ்க்கையையும் வடிவமைக்கும் சிற்பிகளாக, ஆசிரியர்கள் விளங்குகின்றனர். எனவே, ஆசிரியர் பணி அறப்பணி என்பதை மாணவர்கள் மனதில்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் கோவை சிஎஸ்ஐ திருமண்டல செயலாளர் ஆயர் பிரின்ஸ் கால்வின், கல்லூரி செயலாளர் ராஜன், கல்லூரி முதல்வர் கெட்சி மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img