கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவையின் நிறுவனருமான கோவை செழியனின் 25வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாமக்கல் அண்ணாசிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளரும் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினருமான வி.எஸ்.மாதேஸ்வரன் எம்பி தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஆர்.எஸ்.ஆர்.மணி, நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், நாமக்கல் தெற்கு மாவட்ட தலைவர் பழனிமலை, தலைமை நிலைய செயலாளர் செல்வராஜ், துணை செயலாளர், செந்தில் ராஜா இணை செயலாளர்கள் ரமேஷ்குமார், சீனிவாசன், தமிழரசு, மாவட்ட பொருளாளர் சசிகுமார், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் அன்பழகன், மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் பிரகதீஸ்வரன், ஜெகதீசன் இளைஞர் அணி துணைச் செயலாளர் வேலுசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர், மனோஜ் மாவட்ட செய்தி தொடர்பாளர் ரமேஷ், நகரச் செயலாளர் “மாயஸ்”பழனிசாமி ஒன்றிய செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள், சேந்தை சத்யா, சுகன்யா, சுதா மற்றும் மாணவரணி செயலாளர் தினேஷ் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.