கோவை மாவட்ட கூட்டுறவு சார்நிலை அலுவலர்களுக்கான 2023ம் ஆண்டிற்கான புத்தாக்கப்பயிற்சி சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி வளாகத்தில் நடைபெற்றது. இதனை மண்டல இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் இணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் பிரபு, துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபன இணைப்பதிவாளர்/ செயலாட்சியர் சிவகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
உடன் இணைப்பதிவாளர்கள் விஜயகணேஷ், ஆனந்தன், பிராங்களின் தாமஸ், கோபாலகிருஷ்ணன், சுவேதா ஆகியோர் உள்ளனர்.