fbpx
Homeபிற செய்திகள்பல் மருத்துவ அலுவலர்கள் பணி: நேர்காணலுக்கு ஆட்சியர் அழைப்பு

பல் மருத்துவ அலுவலர்கள் பணி: நேர்காணலுக்கு ஆட்சியர் அழைப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 பல் மருத்துவ அலுவலர்கள், 2- பல் மருத்துவ உதவியாளர்கள், அரசு மருத்துவமனைகளில் 5 பல் மருத்துவ அலுவலர்கள், 5- பல் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் நாளை (டிச.16) நடைபெறுகிறது.

முற்றிலும் தற்காலி கமாக ஒப்பந்த அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு பல் மருத்துவ அலுவலர் பதவிக்கு ரூ.34,000/- மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பதவிக்கு ரூ.13,800/- என்ற தொகுப்பூதியத்தில் மாவட்ட நலச்சங்கம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது.

இதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியல் இணையதள லீttஜீs://நீஷீவீனீதீணீtஷீக்ஷீமீ.ஸீவீநீ.வீஸீ – முகவரியில் பதியப் பட்டுள்ளது.

நாளை (டிச.16) காலை 10 மணிக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு கோவை அவினாசி சாலையில் உள்ள, கோவை மருத்துவக் கல்லூரி, கலையரங்கத்தில் நேர்காணல் நடைபெறும்.

நேர்காணலுக்கு வரும் நபர்கள் அனைத்து அசல் சான்றுகளுடன் காலை 9 மணிக்கு, கோவை மருத்துவக்கல்லூரி கலையரங்கத்திற்கு நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img