fbpx
Homeபிற செய்திகள்மாதிரி வாக்குப்பதிவை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்

மாதிரி வாக்குப்பதிவை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்

கோவையில் மாதிரி வாக்குப்பதிவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேரில் ஆய்வு மேற்கொண் டார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பணிகள் மும் மரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குபதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குபதிவு இயந்திரங் களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் ஆய்வு செய்தார்.

இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு செய்யப் படுவது ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் தேர்தல் வட்டாட்சியர் விஜயலட்சுமி, மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img